"டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை" - பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் தகவல்

கொரோனா பரவல், வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக டிசம்பர் இறுதி வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் தகவல்
x
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால், காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வைரஸ் பரவல், பருவமழை எதிரொலியாக, வருகிற டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதானல் அரையாண்டு தேர்வு நடைபெறாது என சொல்லப்படுகிறது. இது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பொதுத்தேர்வு, பாடத்திட்ட குறைப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகததால், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 
Next Story

மேலும் செய்திகள்