தோனி பெயரில் வீடு கட்டிய ரசிகர் - நெஞ்சுருகி நன்றி தெரிவித்துள்ள தோனி

தனது பெயரில் வீடு கட்டிய ரசிகருக்கு நன்றி தெரிவித்து உருக்கமான வீடியோ வெளியீட்டுள்ளார் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி
தோனி பெயரில் வீடு கட்டிய ரசிகர் - நெஞ்சுருகி நன்றி தெரிவித்துள்ள தோனி
x
ஐபிஎல் போட்டிகளில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு,. அதிலும் தோனி களத்தில் நின்று பந்துகளை பறக்கவிடும் போது ஸ்டேடியமே ரசிகர்களின் கர ஒலியால் அதிரும்  என்றால் அது மிகையல்ல.இந்த நிலையில், தோனியின் தீவிர ரசிகரான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர், தோனி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக தனது வீட்டை மஞ்சள் நிற பெயிண்டினால் அலங்கரித்து, அதில் தோனியின் படத்தை வரைந்து அசத்தி இருந்தார். அதுமட்டும் இல்லாமல், அவரது வீட்டிற்கு HOME OF DHONI FAN  எனவும் பெயரிட்டிருந்தார். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், அது தோனியின் பார்வைக்கு வந்துள்ளது.  ரசிகனின் இந்த செயல் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளபக்கத்தில்  தோனி தனது  கருத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். 

இது அன்பின் வெளிப்பாடு என்றும், சிஎஸ்கேவின் ரசிகர்கள் பலத்தை காட்டுக்கிறது எனவும் தோனி அதில் கூறியுள்ளார்,.  ரசிகரின் இந்த செயலை காலத்தால் அழிக்கமுடியாது என்றும் தன் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ள கோபிகிருஷ்ணன் மற்றும் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் தனது நன்றி எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார், தோனி.

தனது பெயரில் வீட்டை உருவாக்கியுள்ள ரசிகருக்கு நன்றி தெரிவித்து தோனி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்