ராஜராஜசோழனின் 1035ஆவது சதய விழா -இரவு 9 மணி அளவில் பெரிய கோயில் வளாகத்தில் வீதிஉலா
பதிவு : அக்டோபர் 26, 2020, 04:52 PM
தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆயிரத்து முப்பத்தைந்தாவது ஆண்டு சதய விழா இன்று காலை தொடங்கியது.
ஆண்டுதோறும் தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அவர் பிறந்த ஐப்பசி மாதம் சதய நாளான இன்று, ஆயிரத்து 35 ஆவது  ஆண்டு சதய விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோயிலில் கலை நிகழ்ச்சிகளுடன்  இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த விழா , இம்முறை கொரோனா காரணமாக கலை நிகழ்ச்சிகள் இன்றி ஒரு நாள் மட்டும் நடைபெற உள்ளது. காலை மங்கல இசையுடன் தொடங்கிய சதய விழாவில் கோயில் பணியாளர்கள்,  சிவாச்சாரியர்கள் மற்றும் ஓதுவார்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. பின்னர் திருமுறை தேவார பாடல்களை பாடி தமிழ் முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அரசு சார்பில் பெரிய கோவிலில் இருந்து பேரணியாக சென்று  மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு,  மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

379 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

323 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

236 views

பிற செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் - யாருக்கு வாய்ப்பு?

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பதை தந்தி டிவி ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தை பார்க்கலாம்...

26 views

"மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிச.14 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி"

சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

181 views

கட்சி குறித்து தானே அறிவிப்பதாக ரஜினி பேச்சு - பொறுமையாக இருங்கள் - ரஜினி வேண்டுகோள்

சென்னையில், மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடர்பாக தானே முடிவெடுத்து அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

121 views

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 15 வயது சிறுமி: நாளொன்றுக்கு 5 முதல் 8 பேர் வரை வன்கொடுமை - 400-க்கும் மேற்பட்டவர்கள் சீரழித்த கொடூரம்

சென்னையில் 15 வயது சிறுமி 400க்கும் மேற்பட்ட மனித மிருகங்களால் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

23555 views

கார்த்திகை தீபமேற்றி குழந்தைகள், இளம்பெண்கள், இல்லதரசிகள் வழிபாடு

திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, குடும்பமாக ஒன்றுகூடிய பெண்கள், வீட்டில் நன்மை ஒளி பரவவேண்டி தீபமேற்றி வழிபட்டனர்.

66 views

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர் - பிப்.24-ம் தேதி ஜெயலலிதா சிலை திறப்பு என தகவல்

மெரினா கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயர் மற்றும் சிலை விரைவில் நிறுவப்படவுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.