தமிழகத்தில் 7 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.
x
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த கொரோனா பாதிப்பு 7 லட்சத்து 193 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. 


சென்னையில் மேலும் 833 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 93 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 556 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்