பொறியியல் படிப்புக்கான இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு - அதிகமான மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி

இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு செப்டம்பர் இறுதியில் நடத்தப்பட்ட இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
பொறியியல் படிப்புக்கான இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு - அதிகமான மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி
x
கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அக மற்றும் புற மதிப்பீடு  அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. இதனையடுத்து அண்ணா பல்கலைக் கழகம் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உதவியுடன் ஆன்லைன் வாயிலாக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வினை நடத்தியது. செப்டம்பர் 24 முதல் 29 வரை, 30 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் ஆன்-லைன் வழியில் நடந்த இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழக இணைய தளங்களில் இதனை பார்க்க முடியும். இந்த தேர்வில், அதிக அளவில் மாணவர்கள்  தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்