அரசு வழக்கறிஞர்கள் மீது ஆறுமுகசாமி ஆணையம் புகார்

உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ தரப்பின் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தாமதம் ஆவதை அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்ப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
x
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 8 வது முறையாக தரப்பட்ட அவகாசம் வரும் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தால், ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், வழக்கை விரைந்து விசாரிக்ககோரும் மனு, நீதிமன்ற தடை ஆணையை நீக்குவதற்கான மனுக்களை உச்சநீதிமன்றத்தில்
உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்று ஆணையம் புகார் தெரிவித்துள்ளது. அப்பல்லோ தரப்பு நீதிமன்றத்தில் வழக்கை ஒத்திவைக்க கோரும்போது, குறைந்தபட்சம் ஆட்சேபனைகூட தெரிவிக்காமல், வழக்கு விசாரணை தாமதம் ஆவதை அரசு வழக்கறிஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, வரும் 24 ஆம் தேதியுடன் முடியவுள்ள கால அவகாசத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கவும் ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்