நடந்து சென்றவர்கள் மீது மோதிய இரு சக்கர வாகனம் - மூதாட்டி உள்ளிட்ட 3 பேர் படுகாயம்
பதிவு : அக்டோபர் 17, 2020, 12:05 PM
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் நடந்து சென்ற கலையரசி என்ற மூதாட்டி மீது அவழியே சென்ற இருசக்கர வாகனம் மோதியுள்ளது,.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் நடந்து சென்ற கலையரசி என்ற மூதாட்டி மீது அவழியே சென்ற இருசக்கர வாகனம் மோதியுள்ளது,. அதில், வாகனத்தை ஓட்டி வந்த காளிமுத்து, அவருடைய குழந்தை மற்றும் மூதாட்டி கலையரசி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்,.  மேலும் இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெடுஞ்சாலை பணியின் போது விபத்து - கான்கிரீட் இயந்திரம் விழுந்து ஒருவர் பலி-ஒருவர் படுகாயம்

மதுரையில் வைகை ஆற்றின் கரைகளில் தடுப்புச் சுவர்கள் மற்றும் ,  சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது,.
இந்த நிலையில் நெடுஞ்சாலை பணி நடைபெற்றுக்கொண்டு இருந்த போது  சிமெண்ட் கலவை இயந்திரம் வைகை ஆற்றின் கரையில்  தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்துள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,. மேலும் காளிமுத்து என்பவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்,.

நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி உருண்டு விபத்து - படகை சுத்தம் செய்துகொண்டு இருந்த மீனவர் பலி

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீன்இறங்கு தளம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது படகை ஜெய்சங்கர் என்ற மீனவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்,. அப்போது மீன்களை ஏற்றி செல்வதற்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி திடீரென உருண்டு வந்து ஜெய்சங்கர்  மீது மோதியது,. அதில் ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்  உடலை  கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


பிற செய்திகள்

4 மாதங்களுக்கு பின் 3000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நான்கு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

7 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

7 views

ஆயுத பூஜை பண்டிகை - வாழை இலை விலை உயர்வு

ஆயுத பூஜைப் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் வாழை இலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

10 views

மிஸ்டு கால் கொடுத்ததில் மலர்ந்த காதல் - காதலித்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

மிஸ்டு கால் கொடுத்து பள்ளி மாணவியை காதலித்து கடைசியில் அவரையே கடத்திச் சென்று திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

11 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

10 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.