திருமண ஆசையில் இருந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் - பெண் பார்ப்பதாக ஆசை காட்டி அழைத்துச் சென்று கொலை
பதிவு : அக்டோபர் 16, 2020, 05:34 PM
திருமண ஆசையில் இருந்த இளைஞர் ஒருவரை பெண் பார்க்க அழைத்துச் செல்வதாக அவரை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள அழிஞ்சிமேடு கிராமத்தில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் மின் கம்பத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் கடந்த 10ஆம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலையானவரின் பெயர் சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது. 27 வயதான இவர் சென்னையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். 

சீர்காழி அருகே உள்ள எடமணல் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், சொந்த ஊரில் தங்கியிருந்த நிலையில் சம்பவத்தன்று சென்னைக்கு செல்வதாக கூறி புறப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டது உறுதியானது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் தான் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. 

பார்ப்பதற்கு சுமாரான தோற்றம் உள்ளதால் தனக்கு பெண் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார் சந்தோஷ் குமார். பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்காத சோகத்தில் இருந்த அவர், தன் நண்பர்களிடம் தனக்கு  பெண் பார்க்குமாறும் உதவி கேட்டுள்ளார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட புதுச்சத்திரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஷ், விருத்தாச்சலத்தை சேர்ந்த சுப்ரமணி ஆகிய 3 பேரும் சந்தோஷ் குமாரை அணுகி உள்ளனர். 

திருமணம் செய்ய பெண் ஒருவர் இருப்பதாகவும், அவரை பார்க்க நேரில் அழைத்துச் செல்வதாகவும் 3 பேர் கூறியதை கேட்டு கல்யாண ஆசையில் சென்றுள்ளார் சந்தோஷ்குமார். சிதம்பரம் புறவழிச்சாலைக்கு அழைத்துச் சென்ற அவர் திடீரென சந்தோஷ் குமாரின் கை, கால்களை கட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த ஒரு லேப்டாப், 2 செல்போன்களையும் அந்த கும்பல் திருடிச் சென்றது. 

சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போது, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒப்புக் கொண்டனர். சந்தோஷ்குமாரிடம் நகை, பணம் அதிகம் இருக்கும் என நினைத்து அவரை ஆசை காட்டி வரவழைத்து கொன்றதாகவும் அவர்கள் கூறியது அதிர்ச்சி ரகம்... 

முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகி அவர்களை நம்பிச் சென்றால் ஆபத்து நேரும் என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கனவில் இருந்தவர் இன்று கொடூரமாக தன் உயிரை விட்டதும் சோகத்தின் உச்சம்... 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

448 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

214 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

77 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

31 views

பிற செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோவின் உண்மை தன்மையயை ஆய்வு செய்து, ப்ளூ கார்னர் நோட்டீஸுடன் இலங்கை போலீசுக்கு அனுப்ப, மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்

517 views

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

33 views

"14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - "நெல்லை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு"

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

297 views

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே நடவுப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள்

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நடவுப் பணிகளை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் காவிரி டெல்டாவில் கடைமடை பகுதி.

72 views

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலையான சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்தது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

8 views

ராஜராஜசோழனின் 1035ஆவது சதய விழா -இரவு 9 மணி அளவில் பெரிய கோயில் வளாகத்தில் வீதிஉலா

தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆயிரத்து முப்பத்தைந்தாவது ஆண்டு சதய விழா இன்று காலை தொடங்கியது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.