தடையை மீறி சேவல் சண்டை சூதாட்டம் - போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடிய கும்பல்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரைப் பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் சேவல் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தடையை மீறி சேவல் சண்டை சூதாட்டம் - போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடிய கும்பல்
x
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரைப் பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் சேவல் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போலீசார் அங்கு சென்றபோது, போலீசாரைக் கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களது சேவல்களுடன் தப்பி ஓடி உள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சூதாட்டக்காரர்களின் 13 பைக்குகளை கைப்பற்றிய போலீசார், தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்