நாசா அனுப்பும் நம் ஊர் செயற்கைகோள் - கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் அசத்தல்

தீப்பெட்டி அளவிலான உலகின் மிக சிறிய செயற்கை கோளை உருவாக்கி அசத்தியுள்ளனர், கரூர் அரசு கல்லூரி மாணவர்கள். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
நாசா அனுப்பும் நம் ஊர் செயற்கைகோள் - கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் அசத்தல்
x
விஞ்ஞான உலகில் விண்ணுலக ஆராய்ச்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, விண்ணில் ஏவப்படும் செயற்கைக் கோள்கள்.

இதன் மூலம் தான் இன்டர்நெட், செல்போன், ராக்கெட் ஏவுதல் போன்ற பல பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் புதுக் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை நடத்தி வருகிறது, நாசா.

இந்த ஆண்டு 73 நாடுகளிலிருந்து 11 வயது முதல் 18 வயது வரையிலான சுமார் 23 ஆயிரம் மாணவர்கள், தங்களது அரிய கண்டுபிடிப்புகளை நாசாவிடம் சமர்ப்பித்து வருகின்றனர். 

அந்த வகையில் சிறந்த செயற்கைக்கோள் கண்டுபிடிப்புகளை தேர்வு செய்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 20 மற்றும் 21ம் தேதிகளில் விண்வெளிக்கு ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளது, நாசா

இதில் வெற்றி கண்டுள்ளனர், கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள். 3 சென்டி மீட்டர் சுற்றளவு உள்ள 64 கிராம் எடையில் இவர்கள் கண்டுபிடித்துள்ள சிறிய செயற்கை கோளை விண்வெளியில் செலுத்தவுள்ளது, நாசா


அட்னன் மற்றும் அருண் ஆகிய இரண்டு அரசு கல்லூரி மாணவர்களும், கேசவன் என்ற தனியார் பள்ளி மாணவரும்  சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த சிறிய செயற்கைக்கோள், வளிமண்டல தட்பவெப்ப  வெப்பநிலையை இரும்பை விட 100 மடங்கு தாங்கக்கூடிய கிராபைன் என்கின்ற தூய்மையான கார்பன் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

விண்ணில் 120 கிலோ மீட்டர் ராக்கெட் மூலம் பயணம் செய்யும் இந்த செயற்கைக்கோள், 13 சென்சார்களை கொண்டது.  


இப்படி பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த சிறிய செயற்கைக்கோளின் தயாரிப்பு செலவு  ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மட்டும் தான்.   

வளிமண்டலத்தில் 120 கிலோ மீட்டர் தொலைவில் 12 நிமிடங்கள் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள், பல ஆய்வுகளை மேற்கொண்டு பசுபிக் பெருங்கடலில் விழும் என்றும், அவற்றை சேகரித்து தங்களிடம் நாசா அனுப்பும்போது, அது குறித்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்போம் என்றும்  பெருமையுடன் கூறுகின்றனர், இந்த மாணவர்கள்



Next Story

மேலும் செய்திகள்