நடப்பது என்ன என தெரியாத சிறுமிகளிடம் பாலியல் தொல்லை: 7 பேரை போக்சோவில் கைது செய்த போலீசார் - தாயின் நடவடிக்கையால் பறிபோன சிறுமியின் வாழ்க்கை
பதிவு : அக்டோபர் 13, 2020, 08:54 PM
ராசிபுரம் அருகே 2 சிறுமிகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு 12 மற்றும் 13 வயதில் 2 பிள்ளைகள். 

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர், சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் தன் பிள்ளைகளுடன் அவர் வசித்து வந்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணிற்கு ஊரில் ஆண் நண்பர்களும் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களின் வீட்டுக்கு ஆண்கள் அதிகம் வருவதாக கூறப்படுகிறது. 

அப்படி வந்து போன சிலரின் கண்கள் சிறுமிகள் 2 பேர் மீதும் விழுந்திருக்கிறது. அந்த பகுதியில் உள்ள ஆலைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார் அந்த பெண். கொரோனா விடுமுறையால் சிறுமிகள் 2 பேரும் வீட்டில் இருந்த நிலையில் அங்கு வந்த ஆண்கள் சிலர் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஆனால் நடப்பது என்னவென்றே தெரியாத சிறுமிகள் இதை தாயிடம் சொன்னபோதும், அவர் அதை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. 
சிறுமிகளுக்கு பிடித்த இனிப்புகளும் சாக்லேட்டுகளும் வாங்கிக் கொடுத்த சிலர் அவர்களிடம் தொடர்ந்து அத்துமீறி வந்துள்ளனர். 

சம்பவத்தன்று 75 வயதான ஊமையன் என்ற முதியவர் ஒருவர் இவர்களின் வீட்டில் இருந்து ஆடைகளின்றி நிர்வாணமாக ஓடுவதை அக்கம் பக்கத்தினர் பார்க்கவே, அவர்கள் நேராக வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது தான் சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்ததை கூறி கதறி அழுதனர். 

பதறிப்போன கிராம மக்கள் இந்த தகவலை மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் கொண்டு செல்லவே, பிரச்சினை பூதாகரமாக வெளிவந்தது. விடுமுறையில் வீட்டில் இருந்த சிறுமிகளிடம் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேலாக இளைஞர்கள், முதியவர்கள் என பாரபட்சமின்றி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

தங்களுக்கு நடந்ததை சிறுமிகள் கூறியதை கேட்டு பதறிப்போன குழந்தைகள் நல அதிகாரிகள், 75 வயது முதியவர் உட்பட 7 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையின் போது சிறுமிகள் மேலும் பலரின் பெயர்களை கூறியதாக தெரிகிறது. இதையடுத்து 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

சிறுமிகள் என்றும் பார்க்காமல் ஒரு கும்பலே அவர்களின் வாழ்க்கையை சீரழித்த சம்பவமும், இதனை தாய் கண்டும் காணாமல் விட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

606 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

102 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

22 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

19 views

பிற செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

8 views

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

10 views

மலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

106 views

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

200 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

49 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

191 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.