"மலைப்பகுதிகளில் இ.பாஸ் நடைமுறை தொடருமா?" : 3 நாட்களில் மத்திய அரசிடம் விளக்கம் பெற்று விளம்பரப்படுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மலைப்பகுதிகளில் இ.பாஸ் நடைமுறைகளை தொடர்வது குறித்து மத்திய அரசிடம் மூன்று நாட்களில் விளக்கம் பெற்று, விரிவாக விளம்பரப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும், நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்கள் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த எழில்நதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மலைப்பகுதிகளில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் என்பதால், வெளியிலிருந்து வருபவர்கள் மூலமாக தொற்று பரவினால் சிக்கல் ஏற்படும் என, அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, மலைப்பகுதிகளில் இ. பாஸ் நடைமுறைகளை தொடர்வது குறித்து மத்திய அரசிடம் 3 நாட்களில் விளக்கம் பெற்று, விரிவாக விளம்பரப்படுத்த தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்