"விசாரணை என்ற பெயரால் அடிக்கடி வீட்டிற்கு வந்து தொல்லை" : கூடி வந்த திருமணம் பாதியில் நின்ற சோகம் - விரக்தியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
பதிவு : அக்டோபர் 13, 2020, 05:39 PM
விசாரணை என்ற பெயரில் போலீசார் அடிக்கடி வீட்டுக்கு வந்ததால் திருமண வாழ்க்கை தடைபட்ட விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் கொண்ட நகரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீது சுத்தமல்லி, சீதபற்ப நல்லூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக போலீசார் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து விசாரணை நடத்துவது வழக்கம். 

மாரியப்பனின் சகோதரியான இசக்கியமாளுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வந்த நிலையில் அண்ணன் மீதான வழக்குகளே அதற்கு தடையாக இருந்துள்ளது. இதனை அறிந்த அண்ணன் மாரியப்பன், தன் தங்கையின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு தான் திருந்தி வாழ்வதாக காவல் நிலையத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

இதனால் மகிழ்ந்து போன குடும்பம், இசக்கியம்மாளுக்கு வரன் தேடும் பணியை தொடர்ந்தது. அந்த சமயம் பார்த்து இவர்களின் உறவினர் ஒருவர் இசக்கியம்மாளை திருமணம் செய்ய முன் வந்துள்ளார். இதனால் திருமண கனவில் இருந்துள்ளார் அந்த இளம்பெண். தடைபட்ட திருமணம் கைகூடி வந்த மகிழ்ச்சியில் இருந்த இசக்கியமாளுக்கு அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. 

ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கு ஒன்றை மீண்டும் தூசி தட்டிய காவல்துறை அதை விசாரிப்பதற்காக மாரியப்பன் வீட்டுக்கு வந்துள்ளனர். இந்த செய்தி இசக்கியம்மாளை திருமணம் செய்ய இருந்தவரின் வீட்டுக்கும் சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த அவர்கள், திருமண முயற்சியை கைவிட்டுள்ளனர். அவர்களின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்தார் இசக்கியம்மாள். 

விரக்தியில் இருந்த அவர், திடீரென விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் பலியானார். 

அதேநேரம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். காவல்துறையின் செயலால் இளம்பெண் ஒருவர் தன் உயிரை  மாய்த்துக் கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

606 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

102 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

22 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

19 views

பிற செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

3 views

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

5 views

மலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

86 views

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

139 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

40 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

169 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.