பெற்றோர்களே உஷார்!...குழந்தைகளை குறிவைக்கும் பிம்ஸ் நோய்...
பதிவு : அக்டோபர் 13, 2020, 09:42 AM
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் மூலம் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிம்ஸ் என்னும் நோய் அதிகம் பரவி வருகிறது. பிம்ஸ் நோய் என்றால் என்ன? இந்த நோய் எப்படி பரவுவது என்பதை தற்போது பார்க்கலாம்
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார்  6 லட்சத்து 60 ஆயிரத்தை தொட்டுள்ளது. 

இந்த வைரஸ் தொற்று பெரும்பாலும் குழந்தைகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று நிம்மதி அடைந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெரியவர்களால்,  குழந்தைகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக. பிம்ஸ் எனும் நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை குறைந்த அளவிலும், 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, அதிக அளவிலும் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது .

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் முதியவர்கள் குழந்தைகளுடன் இருக்கும் போது, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
2 அல்லது 3 வாரங்கள் கழித்து குழந்தைகளுக்கு உடலில் சிறு பாதிப்புகள் ஏற்படுகிறது.ஏப்ரல் மாதத்தில் பல நாடுகளில் ஆய்வின் மூலம் இவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஜூன் மாதத்துக்கு பிறகு  இது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல், சளி மற்றும் தோல்கள் சிவந்து காணப்படுவது போன்றவை  பிம்ஸ் நோயின் அறிகுறியாக இருக்கிறது.
இங்கிலாந்து போன்ற நாடுகளில், இத்தகைய பாதிப்புக்கு 'பிம்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

"குழந்தை 20 வயதை நெருங்கும்போது மாரடைப்பு ஏற்படும் அபாயம்"

இந்த நோய் குழந்தைகளின் இதயத்தை தாக்கி, அந்த குழந்தை 20 வயதை நெருங்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்படுத்தும் அபாயம் உண்டாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

"பிம்ஸ் பாதிப்புடன் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை"

பிம்ஸ் பாதிப்புடன் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள்  எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக கூறுகிறார்.கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் பிம்ஸ் என்ற புதிய நோய் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பனும் இந்த நோய்க்கு மருந்து இருக்கிறது என்பது சற்று ஆறுதலான  செய்தியாக இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு - அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

9 views

ஓரின சேர்க்கையாளர் மற்றும் திருநங்கை எம்.பி.க்கள் - அதிகளவில் உறுப்பினர்களாக கொண்டு நியூசிலாந்து பாராளுமன்றம் சாதனை

உலகிலேயே அதிக ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளை எம்.பி.க்களாக கொண்ட பாரளுமன்றமாக நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது.

9 views

பிற செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோவின் உண்மை தன்மையயை ஆய்வு செய்து, ப்ளூ கார்னர் நோட்டீஸுடன் இலங்கை போலீசுக்கு அனுப்ப, மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்

511 views

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

33 views

"14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - "நெல்லை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு"

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

296 views

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே நடவுப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள்

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நடவுப் பணிகளை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் காவிரி டெல்டாவில் கடைமடை பகுதி.

72 views

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலையான சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்தது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

8 views

ராஜராஜசோழனின் 1035ஆவது சதய விழா -இரவு 9 மணி அளவில் பெரிய கோயில் வளாகத்தில் வீதிஉலா

தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆயிரத்து முப்பத்தைந்தாவது ஆண்டு சதய விழா இன்று காலை தொடங்கியது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.