கத்தோலிக்க திருச்சபைகளில் தலித்கள் புறக்கணிக்கப்பு" - வரும் 24 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்ப

தமிழகத்தில் கத்தோலிக்க திருச்சபைகளில் தலித்கள் புறக்கணிக்கப்படுவதாக, தலித் கிறிஸ்தவ பேரவையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபைகளில் தலித்கள் புறக்கணிக்கப்பு - வரும் 24 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்ப
x
தமிழகத்தில் கத்தோலிக்க திருச்சபைகளில் தலித்கள் புறக்கணிக்கப்படுவதாக, தலித் கிறிஸ்தவ பேரவையினர் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பேரவையின்  செயலாளர் சார்லஸ், தமிழகத்தில் 18 கிறிஸ்துவ கத்தோலிக்க மறைமாவட்டங்கள் உள்ளதாக தெரிவித்தார்.இதில் 80சதவீதத்தினர் தலித் கிறிஸ்தவ மக்கள் என்றும், ஆனால் கத்தோலிக்க திருச்சபைகளில் தலித்துகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லையென குற்றம்சாட்டினார். கடந்த 14 ஆண்டுகளில் ஒரு தலித் கிறிஸ்தவ ஆயர்கூட நியமிக்கப்படவில்லை என்ற அவர், இதைக்கண்டித்து, வரும் 24 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்