"நீட் தேர்வு முடிவுகள் வரும்16 ஆம் தேதி வெளியிடப்படும்" - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் வரும்16 ஆம் தேதி வெளியிடப்படும் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்
x
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 2020-21 ஆம் கல்வி ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடு முழுவதும் சுமார்16 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 85 முதல் 90 சதவீதத்தினர் நீட் தேர்வில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வரும்16 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. அதன்பின்னர், மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கவுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்