ஆஸ்திரேலியாவுக்கு பூக்கள் கடத்த முயற்சி - சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றிலைகளின் கீழே பூக்களை மறைத்து சட்டவிரோதமாக கடத்தியது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
x
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககப் பிரிவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களின் மூலம்  பெருமளவில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன. அதேபோல் வெளிநாடுகளுக்கு செல்லும் சரக்கு விமானங்களிலும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்பட வந்தன. இவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்ககப்பிரிவுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்ப இருந்த பார்சல்களை ஆய்வு செய்தனர். இந்த சோதனையானது அதிகாலை வரை நடந்தது. 
அப்போது சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு வெற்றிலைகளின் கீழே பூக்களை மறைத்து சட்டவிரோதமாக கடத்தியதும் தெரியவந்தது. இதன் மூலம் பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தியதும் உறுதியான நிலையில், இதற்கு உடந்தையாக இருந்த ஏஜெண்டுகள், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள், சுங்கத்துறையினர் ஆகியோரிடம் இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.... 


Next Story

மேலும் செய்திகள்