கீழவடகரை ஊராட்சிமன்ற தலைவர் தலித் என்பதால் புறக்கணிப்பு - "பாஜகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் தடுப்பதாக குற்றச்சாட்டு"

தேனி மாவட்டம் கீழவடகரை ஊராட்சிமன்ற தலைவர் தலித் என்பதால், சுதந்திரமாக செயல்படவிடாமல், பாஜகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
x
பெரியகுளத்தில் நடைபெற்ற  மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பு அவசர கூட்டத்தில், பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவி  செல்வராணி செல்வரராஜ் முறையிட்டுள்ளார். தன்னிடம் கேட்காமல் யாருக்கும் சாலை ஒப்பந்தம் கொடுக்க கூடாது என, பாஜகவைச் சேர்ந்த ராஜபாண்டியன் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.இதையடுத்து  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாளை தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்