புத்தூர் மீன் மார்க்கெட் இடமாற்றம் - தங்களுக்கு கடை ஒதுக்கவில்லை என வியாபாரிகள் போராட்டம்

திருச்சி மாநகரத்திற்குட்பட்ட புத்தூர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மீன் மற்றும் கோழி இறைச்சி மார்ககெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
புத்தூர் மீன் மார்க்கெட் இடமாற்றம் - தங்களுக்கு கடை ஒதுக்கவில்லை என வியாபாரிகள் போராட்டம்
x
திருச்சி மாநகரத்திற்குட்பட்ட புத்தூர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மீன் மற்றும் கோழி இறைச்சி  மார்ககெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உறையூர் அருகே புதிய மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளாக புத்தூர் மார்க்கெட்டில் மீன் மற்றும் கோழி இறைச்சி கடை வைத்துள்ள சில்லறை வியாபாரிகள் தங்களுக்கும் புதிய இடத்தில் இடம் ஒதுக்கி தர வேண்டும்  என்றும் இல்லாவிட்டால் புத்தூரில் தான்  கடை வைத்திருப்போம் என்றும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வியாபாரிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்