கிராம சாலை டெண்டர்கள் ரத்து - ஸ்டாலின் வரவேற்பு

ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக விடப்பட்டுள்ள 2 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கிராம சாலை டெண்டர்கள் ரத்து - ஸ்டாலின் வரவேற்பு
x
ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக விடப்பட்டுள்ள 2 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்துள்ள இந்த தீர்ப்பு, அரசியல் சட்டம் தந்துள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிராகச் செயல்பட நினைத்த அதிமுக அரசுக்கு, ஒரு சம்மட்டி அடி என கூறியுள்ளார். உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், 14-ஆவது நிதிக்குழு நிதியிலான அனைத்துப் பணிகளையும், ஊராட்சி மன்றங்களுக்கே ஒதுக்கிட வேண்டும் என்றும், ஊராட்சி மன்றங்களில் நடைபெறும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களை வைத்து "இ-டெண்டர்" விடும் முறையை அ.தி.மு.க. அரசு இத்தோடு மூட்டை கட்டித் தூக்கியெறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சரின் ஊழல்களுக்குத் துணை போகும் அதிகாரிகளும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்