"அறிவித்து விட்டு பின்வாங்கும் மத்திய அரசு"

மொழி மற்றும் தேர்வு தொடர்பாக அண்மைக்காலமாக மத்திய அரசு வெளியிடும் அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், அறிவிக்கப்பட்ட முடிவுகளை திரும்பப் பெறப்பட்டு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.
அறிவித்து விட்டு பின்வாங்கும் மத்திய அரசு
x
மொழி மற்றும் தேர்வு தொடர்பாக அண்மைக்காலமாக மத்திய அரசு வெளியிடும் அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், அறிவிக்கப்பட்ட முடிவுகளை திரும்பப் பெறப்பட்டு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை நடத்தப்பட்ட 
தபால் துறை தேர்வுகளில் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படாது என்ற அறிவிப்பு வெளியானது.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டன.

இதையடுத்து இந்தியிலும் இதர அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு  அறிவித்தது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட  புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில், பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என கூறப்பட்டது.இதற்கு தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

 இதையடுத்து தேசிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசு, இந்தி கட்டாயம் இல்லை' என அறிவித்தது.

தொல்லியல்துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்பிற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.

இந்த படிப்பிற்கான கல்வித்தகுதியில் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து தொல்லியல்துறை முதுகலை படிப்பில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது

இப்படி மாநில மொழிகளை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பின்னர் மத்திய அரசு பின்வாங்கி மாற்றிக்கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது.




Next Story

மேலும் செய்திகள்