கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகள் விரைவில் நிறைவடையும் என தகவல்

திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணை பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகள் விரைவில் நிறைவடையும் என தகவல்
x
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கொள்ளிடம் மேலணையில் உள்ள கதவணையில் உடைப்பு ஏற்பட்டு 9 மதகுகள் வெள்ளத்தில்
அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து 
முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி முக்கொம்பு சென்று நேரில் பார்வையிட்டார்.  38 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் மேலணையில் உடைப்பு ஏற்பட்ட மதகுகள் சரி செய்யப்பட்டு தற்காலிக தடுப்பணை அமைக்கப்பட்டது. 

பின்னர் உடைப்பு ஏற்பட்ட அணையில் இருந்து
100 மீட்டர் தொலைவில் புதிய கதவணை கட்டும் பணிகள் 387 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 60 சதவீதம் முடிவடைந்த இப்பணிகள் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிகிறது. இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்