மாணவர்களை பாராட்டிய முன்னாள் மருத்துவ ஆசிரியர்கள் : "சிறப்பான சேவை அளித்ததாக நெகிழ்ச்சியான நன்றி"

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடத்துவதாக மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி கூறியுள்ளார்.
மாணவர்களை பாராட்டிய முன்னாள் மருத்துவ ஆசிரியர்கள் : சிறப்பான சேவை அளித்ததாக நெகிழ்ச்சியான நன்றி
x
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. அவர்கள், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தனர். இதைஒட்டி,1969 ஆம் ஆணடு படித்த முன்னாள் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் ஒன்றிணைந்து, தங்கள் நன்றியை தெரிவிக்கும் வண்ணம் அரசு ராஜாஜி மருத்துவமனை தலைவருக்கு பாராட்டு விழா நடத்தினர். இதுகுறித்து பேசிய மருத்துவமனை தலைவர் சங்குமணி, இங்கு1461 படுக்கை வசதிகள் உள்ளது எனவும் 883 ஆக்சிசன் வசதிகள் கூடிய படுக்கை வசதிகள் உள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது தான் வழக்கம். ஆனால், இங்கு ஆசிரியர்கள் மாணவர்களாகிய எங்களுக்கு விழா நடத்துகின்றனர் என நெகிழ்ச்சியுடன் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்