திமுக கொள்கை பரப்பு செயலாளராக திண்டுக்கல் லியோனி, சபாபதி மோகன் நியமனம்

தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
x
தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஆ.ராசா, துணைப் பொதுச் செயலாளராகவும், தங்க தமிழ்ச்செல்வன் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். திமுகவில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற சட்ட விதிகள் உள்ளதால், காலியான இந்த பதவியிடங்களுக்கு திண்டுக்கல் லியோனி மற்றும் சபாபதி மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்