கீழடி 6ம் கட்ட அகழ்வாய்வு பணி இன்றுடன் நிறைவு

கீழடி ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
கீழடி 6ம் கட்ட அகழ்வாய்வு பணி இன்றுடன் நிறைவு
x
தமிழரின் தொன்மையான வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக கீழடி அகழ்வாய்வில் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் 40 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட கீழடி அகழாய்வு பணியில், இதுவரை குழந்தைகளின் எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், இணைப்பு பானைகள், பானை ஓடுகள், கருப்பு சிவப்பு பானைகள், தரைதளம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆறாம் கட்ட ஆய்வு பணி இன்றுடன் நிறைவு பெறுகின்றன. மணலூர், அகரம் உள்ளிட்ட இடங்களில் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. 7 ஆம் கட்ட ஆய்வு பணிகள் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்க உள்ள நிலையில், ஏழாம் கட்ட அகழ்வாய்வு பணியை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்