சென்னையில் என்.ஐ.ஏ., கிளை - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 28, 2020, 09:44 PM
சென்னையில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி, மும்பை, ஐதராபாத், கொச்சி என ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பின் 9 கிளைகள், நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிதாக சென்னை, இம்பால், ராஞ்சி ஆகிய நகரங்களில் என்ஐஏவின் கிளைகள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதம் தொடர்பான வழக்குகள், தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் முக்கியமான தகவல்கள் மற்றும் சான்றுகளை விரைந்து பெற இது உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.