பி.டி.கத்தரிக்காய் கள ஆய்வு - ஸ்டாலின் கண்டனம்

பி.டி. கத்தரிக்காய் கள ஆய்விற்கு, பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும், இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிராகரிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பி.டி.கத்தரிக்காய் கள ஆய்வு - ஸ்டாலின் கண்டனம்
x
காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்த போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை வணிக ரீதியில் உற்பத்தி செய்யத் தடை விதிக்கப்பட்டதாக தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உணர்வுகளை மதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முடிவினை, தற்போது மத்திய பா.ஜ.க. அரசு மாற்றுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

பண்ணை ஒப்பந்தம் என்று கூறி, விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமைகளாக்க முயற்சிப்பது போல், 

பி.டி. கத்தரிக்காய்  என்று அறிமுகம் செய்து பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு நம்மூர் விவசாயிகளை அடிமையாக்கும் நடவடிக்கைக்கு மத்திய பா.ஜ.க. அரசு துணை போவதாக கூறியுள்ளார்.

மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் "பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வை, முதலமைச்சர் பழனிசாமி முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்