12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - தாயின் கள்ளக்காதலனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்
பதிவு : செப்டம்பர் 28, 2020, 03:05 PM
புதுக்கோட்டையில் தாயின் கள்ளக்காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து தன் 12 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார்... தனிமையில் வசித்து வந்த இவருக்கு செங்கை தோப்பு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கணேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

இருவரும் 6 வருடங்களாக கணவன், மனைவி போலவே வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் கணேசன் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதும் வாடிக்கையாகி போனது. காதலியை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்து சென்ற அவருக்கு, அங்கிருந்த 12 வயது சிறுமி  மீது பார்வை விழுந்துள்ளது. 

ஏழாம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி, இதெல்லாம் தெரியாமல் தன் படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார். சிறுமியை அடைந்தே தீருவது என திட்டம் தீட்டிய கணேசன், சம்பவத்தன்று தூக்க மாத்திரைகளுடன் காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து காதலிக்கும் அவரது மகளுக்கும் கொடுத்த கணேசன், தான் நினைத்தபடியே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்... 

தூக்கம் தெளிந்து எழுந்த சிறுமிக்கு தனக்கு நேர்ந்த கொடூரம் தெரியவரவே, பதறிப் போனார். வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் புழுங்கிய சிறுமி, தன் வீட்டில் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மகளின் சடலத்தை பார்த்த தாய், கதறி அழுதபடி போலீசாருக்கு தகவல்  சொன்ன போது தான் நடந்த அத்தனை விபரீதங்களும் வெளி உலகுக்கு தெரியவந்தது. 

சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த கணேசனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியின் தாயிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... 

பிரேத பரிசோதனை முடிவில் தான் சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? என்பது தெரியவரும். 

தொடர்புடைய செய்திகள்

(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...

சிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன்-பத்திரிகையாளர் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || கரு.நாகராஜன்-பாஜக || குறளார் கோபிநாத்-அதிமுக

75 views

(29/10/2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : போகாத ஊருக்கு வழி சொல்கிறாரா ரஜினி ?

(29/10/2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : போகாத ஊருக்கு வழி சொல்கிறாரா ரஜினி ?

72 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

68 views

(05/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரை : ஆன்மிகமா ? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்களாக : நரேந்திரன், பா.ஜ.க/புகழேந்தி, அதிமுக/பாலாஜி, விசிக/சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்

63 views

(02.11.2020) ஏழரை

(02.11.2020) ஏழரை

45 views

(01/11/2020) ஆயுத எழுத்து - தாராள தளர்வுகள் : தவிர்க்க முடியாததா? தவறான முடிவா?

(01/11/2020) ஆயுத எழுத்து - தாராள தளர்வுகள் : தவிர்க்க முடியாததா? தவறான முடிவா? - சிறப்பு விருந்தினர்களாக : சரவணன் எம்.எல்.ஏ-திமுக // தனியரசு எம்.எல்.ஏ-கொ.இ.பே // கோவை செல்வராஜ்-அதிமுக // ரவீந்திரநாத்-மருத்துவர்

41 views

பிற செய்திகள்

அம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

11 views

7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.

18 views

நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரம்

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்

29 views

தமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

புதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

25 views

நிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

22 views

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

119 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.