செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் முழக்கம் - 3 மணி நேரத்திற்கு மேல் தொடரும் அதிமுக செயற்குழு

அதிமுக செயற்குழு கூட்டத்தில் மீண்டும் முதல்வர் வேட்பாளர் விவகாரம் எழுந்ததாக தெரிகிறது.
x
அதிமுக செயற்குழு கூட்டத்தில் மீண்டும் முதல்வர் வேட்பாளர் விவகாரம் எழுந்ததாக தெரிகிறது. முதல்வர் வேட்பாளர் முழக்கம் தொடர்ந்ததால் காலை 10 மணிக்கு துவங்கிய கூட்டம் 3 மணி நேரத்திற்கு மேல் தொடருகிறது. தேர்தலுக்கு முன்பே முதலமைச்சர் வேட்பாளர் பெயரை அறிவிக்குமாறு செயற்குழுவில் கோரிக்கை எழுந்தது. மேலும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் எனவும், அந்த குழுவே முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் பன்னீர் செல்வம் தரப்பினர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வழிகாட்டுதல் குழுவை தற்போது அமைக்க இயலாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறியதால் தொடர்ந்து விவாதம் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Next Story

மேலும் செய்திகள்