முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கொலை வழக்கு: "கோவாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி" - விசாரணையில் வெளியான திடீர் திருப்பம்
பதிவு : செப்டம்பர் 25, 2020, 12:18 PM
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், விசாரணையில் வெளியான சில திடீர் திருப்பங்களை வரும் தொகுப்பில் பார்க்கலாம்... 

கடந்த 19 ஆம் தேதி மாலை... தனக்கு நேரப்போகும் விபரீதம் குறித்து அறியாமல், கோழிவாக்கம் என்ற பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமச்சந்திரன்... எங்கிருந்தோ வந்த அந்த கூலிப்படை கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் அவரை வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து பறந்த‌து... தகவல் காட்டுத்தீ போல் பரவ, ராமச்சந்திரன் பதவி வகித்த, இடைக்கழிநாடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்டவர்கள் நடத்திய சாலை மறியலால் போக்குவரத்து ஸ்தம்பித்த‌து. 

அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சூனாம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 5 நாட்கள் தீவிர விசாரணைக்கு பின் கொல்லப்பட்ட ராமச்சந்திரனிடம் இறுதியாக செல்போனில் பேசிய சேம்புலிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் கொலைக்கான காரணம் வெளிவந்த‌து... 

கடப்பாக்கம் பகுதியில் சுந்தர‌ரெட்டியார் என்பவருக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக ராமச்சந்திரனுக்கும்,  சேம்புலிபுரத்தை சேர்ந்த விக்னேசுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. ஒன்றரை கோடிக்கு அந்த நிலம் விலை பேசப்பட்ட நிலையில், முன்பணமாக 47 லட்சம் ரூபாயை ராமச்சந்திரனிடம் இருந்து பெற்றுகொண்ட விக்னேஸ், உரிமையாளர் சுந்தர‌ரெட்டியாரிடம் கொடுக்க மறுத்துள்ளார். ஒருகட்டத்தில் பணத்தை மொத்தமாக அமுக்க நினைத்த விக்னேஷ், ராமச்சந்திரனை தீர்த்துக்கட்ட, தன் நண்பர் மாரிமுத்துவுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டுள்ளார். அதன் படி, புதுச்சேரியில் இருந்து கூலிப்படை வரவழைக்கப்பட்டு, இந்த கொலையை செய்து முடித்துள்ளனர். 

ஏற்கனவே கும்பகோணம் நீதிமன்றத்தில் புதுச்சேரி கூலிப்படை கும்பலை சேர்ந்த ஸ்ரீதர் சரணடைந்த நிலையில், தற்போது தனிப்படை போலீசார் கோவாவில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி விக்னேசை கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

588 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

144 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

91 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

11 views

பிற செய்திகள்

சட்டவிரோத தண்ணீர் உறிஞ்சப்படுவதாக புகார் - ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதி அனுப்ப அறிவுரை

தமிழில் எழுதி அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியவர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து வலியுறுத்தி உள்ளார்.

0 views

"எனது தோழி" : ரயில்வேயின் புதிய முயற்சி - பெண் பயணிகளுக்காக ரயில்வே சிறப்பு ஏற்பாடு

பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக எனது தோழி என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

4 views

"தீபாவளி நிவாரணத் தொகை வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

6 views

கொத்தடிமைகளாக பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள்? - ஜார்கண்ட் மாநில அரசு புகாரின் பேரில் விசாரணை

சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் 120 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக வந்த புகாரையடுத்து, அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

4 views

மாற்று திறனாளி மாணவர்கள் தொடர்பான வழக்கு - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆஜராக உத்தரவு

பள்ளி கட்டடங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதில் அணுகும்வகையில் வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 views

"7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.