உயிரை குடித்த ப‌ப்ஜி, ஆன்லைன் ரம்மி - செல்போனுக்கு அடிமையான 14 வயது சிறுவன்
பதிவு : செப்டம்பர் 25, 2020, 09:30 AM
ப‌ப்ஜி, ஆன்லைன் சூதாட்டம் பறித்த உயிர்களின் பட்டியலில் கன்னியாகுமரியை சேர்ந்த 14 வயது சிறுவனும் இடம் பிடித்துள்ளான்...
ஊரடங்கு தொடங்கியது முதலே கொரோனா ஒருபக்கம் மக்களை கொன்று குவிக்க.... மற்றொரு பக்கம் இளசுகளை கொன்று குவித்து கொண்டிருக்கின்றன இந்த செல்போன்கள்... குறிப்பாக டிக்டாக், ப‌ப்ஜி, ஆன்லைன் ரம்மி போன்ற செயலிகள், பெரும்பாலான இளசுகளை அடிமையாக்கி வைத்திருந்தன. இதனால் மத்திய அரசு, டிக்டாக் , ப‌ப்ஜி போன்ற சீன செயலிகளுக்கு தடை விதித்து, பெற்றோரிடையே நிம்மதியை ஏற்படுத்தியது. 

துரதிருஷ்டவசமாக ப‌ப்ஜி கேமை புதிதாகத்தான் பயன்படுத்த முடியவில்லையே தவிர, ஏற்கனவே செல்போன்களில் இருக்கும் பட்சத்தில் விளையாட முடிகிறது... இதன் காரணமாக ஏற்கனவே அந்த கேமிற்கு அடிமையானவர்கள் இன்றும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்... அதில் ஒரு சிறுவன் தான் அந்த கேமிற்காகவே தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளான்... 

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்த ராஜகுமார் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.... இவரது 14 வயது மகன் சஜன்... கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதலே ப‌ப்ஜி மற்றும் ஆன்லைன் ரம்மி கேமில் மூழ்கி கிடந்துள்ளார். தாய் கீதா பலமுறை கண்டித்தும் கண்டுகொள்ளாத சஜன் ஆன்லைன் ரம்மியில் அவ்வப்போது பணத்தையும் இழந்து வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் ஆன்லைன் ரம்மி கேமிற்கு பணம் செலுத்த பெற்றோரை மிரட்டும் அளவிற்கு அந்த கேமில் அடிமையாகி இருந்திருக்கிறார் சஜன்... இதனால் அதிர்ச்சியடைந்த கீதா, பணம் தர முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளார். சவுதியில் இருந்து போன் செய்த த‌ந்தை ராஜகுமாரும் கண்டிக்கவே ஆத்திரமடைந்த சஜன் செல்போனை தரையில் வீசி உடைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.... 

இதையடுத்து அங்குள்ள வாழை தோட்டத்தில் விஷம் அருந்தி, மயங்கிய நிலையில் கிடந்த சஜனை அங்கிருந்த விவசாயிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் சஜன்...இன்றைய இளம் தலைமுறையினரை செல்போனுக்கு அடிமையாக விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அப்படி அடிமையானதை உணர்ந்தால் பக்குவமாக எடுத்துச்சொல்லியோ,மாற்று ஆர்வத்தை தூண்டியோ, அவர்கள் மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல ஆர்வலர்கள்... 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

587 views

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

199 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

144 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

90 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

11 views

பிற செய்திகள்

"எனது தோழி" : ரயில்வேயின் புதிய முயற்சி - பெண் பயணிகளுக்காக ரயில்வே சிறப்பு ஏற்பாடு

பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக எனது தோழி என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

0 views

"தீபாவளி நிவாரணத் தொகை வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

2 views

கொத்தடிமைகளாக பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள்? - ஜார்கண்ட் மாநில அரசு புகாரின் பேரில் விசாரணை

சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் 120 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக வந்த புகாரையடுத்து, அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

3 views

மாற்று திறனாளி மாணவர்கள் தொடர்பான வழக்கு - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆஜராக உத்தரவு

பள்ளி கட்டடங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதில் அணுகும்வகையில் வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 views

"7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

24 views

"5ஜி அலைக்கற்றை ஏலம் நடத்தினால் பார்தி ஏர்டெல் பங்கேற்காது" - பார்தி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் தகவல்

அடுத்த ஆண்டு 5ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டால், பார்தி ஏர்டெல் அதில் பங்கேற்காது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் கூறியுள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.