தனிநபர் சொத்துரிமையை பாதிக்கும் சட்டத் திருத்தம் - திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை

தனிநபர் சொத்துரிமையை பாதிக்கும் அதிமுக அரசின் தமிழ்நாடு நகர்புற ஊரமைப்பு திருத்த சட்டம் 2020க்கு, ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கோரியுள்ளார்.
தனிநபர் சொத்துரிமையை பாதிக்கும் சட்டத் திருத்தம் - திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை
x
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசு நிலம் கையகம் மற்றும் ஒரு பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டம் குறித்த விவரங்களை நில உரிமையாளர்களுக்கு சொல்லத் தேவையில்லை, பெயர்களை வெளியிட வேண்டியதில்லை என்ற உள்நோக்கத்துடன் சட்டத் திருத்தம் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். நில மற்றும் கட்டட உரிமையாளர்களுக்கு அந்தப் பகுதியில் மேற்கொள்ளும் திட்டம் குறித்து சொல்லத் தேவையில்லை என்ற திருத்த மசோதாவை திமுக கடுமையாக எதிர்த்த நிலையில், அதை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளார். ஆரம்ப நிலையிலேயே தன்னுடைய நிலம் எடுக்கப்படுகிறது என அறிந்து கொள்ள உதவும், தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்புச் சட்ட விதி 21 தொடர வேண்டும் என தங்கள் கட்சி எம்.எல்.ஏ. ரகுபதி வலியுறுத்தாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், கண்மூடித்தனமாகக் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தில், பொதுமக்களின் கலந்தாய்வை" ரத்து செய்யும் சட்டத்துக்கு அனுமதிக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்