பழங்கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு - சிலைகள் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு

காரைக்கால் சேத்தூர் அருகே குளம் வெட்டிய போது, பழங்கால ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பழங்கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு - சிலைகள் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு
x
காரைக்கால் சேத்தூர் அருகே குளம் வெட்டிய போது, பழங்கால ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவாசல் திடல் கிராமத்தில், வேளாண் பண்ணை அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் தொழிலாளர்கள் குளம் வெட்டினர். அப்போது பூமிக்கு அடியில் இரண்டடி உயரமுள்ள இரண்டு சுவாமி சிலைகள் இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து சிலைகளை  வெளியே எடுத்து பார்த்த போது அது பழங்காலத்து வரதராஜ பெருமாள் மற்றும் காலிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலைகள் என  தெரியவந்தது.  மீட்கப்பட்ட சுவாமி சிலைகள் காரைக்கால் வருவாய்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு,  காரைக்காலில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்