"மாணவர்களுக்கு பாடச் சுமையை குறைக்க நடவடிக்கை வேண்டும்" -திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு

பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அளித்த பரிந்துரை அறிக்கை பரண்மேல் தூங்குவதாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
மாணவர்களுக்கு பாடச் சுமையை குறைக்க நடவடிக்கை வேண்டும் -திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
x
பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அளித்த பரிந்துரை அறிக்கை பரண்மேல் தூங்குவதாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். பள்ளிகள்  திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என அமைச்சர் கூறியுள்ள நிலையில், காலாண்டு தேர்வு நடத்தாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஒரு சில மாதங்களில் பொது தேர்வை சந்திக்க கூடிய நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டு விடும் என்றும், எனவே மாணவர்களுக்கான பாடச் சுமையை குறைக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்கம் தென்னரசு  வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்