கள்ளக்காதல் ஜோடிகளை குறிவைத்து கொள்ளை - 5 ஆண்டுகளுக்கும் மேலாக இது தான் தொழில் என வாக்குமூலம்
பதிவு : செப்டம்பர் 23, 2020, 07:20 PM
சென்னையில் பொது இடங்களில் தனிமையில் இருக்கும் கள்ளக்காதல் ஜோடிகளிடம் போலீஸ் என கூறி மிரட்டி பணம், நகைகளை பறித்துச் சென்ற கில்லாடி ஆசாமி நிஜ போலீசிடம் சிக்கிய கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
சென்னையை அடுத்த மணலியை சேர்ந்த காதல் ஜோடிகள் அங்குள்ள மைதானம் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். ஆனால் இவர்கள் 2 பேருக்குமே ஏற்கனவே திருமணமாகி இப்போது முறையற்ற உறவில் இருந்துள்ளனர். தனிமையில் இவர்கள் 2 பேரும் இருப்பதை அறிந்த நபர் ஒருவர் அங்கே வந்து தன்னை போலீஸ் என கூறியுள்ளார். பார்ப்பதற்கு டிப் டாப் ஆக இருந்த அந்த நபரை பார்த்ததும் பயந்து போனது அந்த ஜோடி. அவர்களின் செய்கையே கள்ளக்காதல் ஜோடிகள் என்பதை காட்டிக் கொடுக்க, இதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் அந்த நபர். நீங்கள் கள்ளக்காதல் ஜோடிகள் என்பதை இரு குடும்பத்திலும் சொல்லிவிடுவேன் என கூறி மிரட்டியதோடு, காதலன் முன்பே அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் இவற்றை பறித்துச் சென்றுள்ளார். தனக்கு நடந்ததை பற்றி மணலி காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்த போது தான், போலியான போலீசால் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வைத்து சோதனை செய்த போது மாதவரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு டிப் டாப் ஆக சுற்றி வந்த ஒருவர் மீது சந்தேகம் ஏற்படவே, அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமி பிச்சைமணி என்பது தெரியவந்தது. தண்டையார்பேட்டையை சேர்ந்த இவர், ஏராளமான டேங்கர் லாரிகளின் உரிமையாளர் என்பதும், அதில் இருந்து வரும் வருமானம் உல்லாச வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லாததால் நூதன கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அத்தனை உண்மைகளும் தெரியவந்தது.  இவரின் முழு நேர வேலையே தனிமையில் இருக்கும் கள்ளக்காதல் ஜோடிகளை குறிவைத்து கொள்ளையடிப்பது தானாம்... டிப் டாப் ஆக இருக்கும் தன் தோற்றமே அதற்கு கை கொடுக்க, தன்னை போலீஸ் என கூறிக் கொண்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக இதையே தொழிலாக வைத்துள்ளார். பூங்கா, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தனிமையில் அத்துமீறும் கள்ளக்காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பது மட்டுமின்றி, பெண்களை பலாத்காரம் செய்வதும் இவரின் வழக்கமாம்... இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் இவரிடம் சிக்கி தங்கள் வாழ்க்கையை தொலைத்து இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் கள்ளக்காதல் விவகாரம் என்பதால் இதை யாரும் வெளியே சொல்ல முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. கைதான இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாகவே இதுபோன்ற வழக்கில் கைதாகி வெளியே வந்தவர் மீண்டும் தன் சேட்டையை ஆரம்பித்து இப்போது வசமாக சிக்கியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

351 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

142 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

42 views

பிற செய்திகள்

"சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார்" - ஜெகன்மோகன்ரெட்டிக்கு ராமதாஸ் பாராட்டு

ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

29 views

தமிழகத்தில் 7 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.

101 views

7.5 சதவீதம் இடஒதுக்கீடு - ஆளுநர் ஸ்டாலினுக்கு கடிதம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

274 views

தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்படுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

56 வகையான பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்காக நல வாரியம் அமைத்து, ஆந்திர அரசு சாதனை படைத்திருப்பதாக ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

27 views

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் விவகாரம் - மாணவர்களைக் குழப்பிய சுற்றறிக்கை

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என அறிவிக்க தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர்.

243 views

திருப்பூர் மாவட்டம் நான்காக பிரிப்பு - நிர்வாக வசதிக்காக பிரித்து பொறுப்பாளர்களை நியமித்தது திமுக

நிர்வாக வசதிக்காக திருப்பூர் மாவட்டத்தை, 4 மாவட்டங்களாக பிரித்து, திமுக தலைமை பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.