40% கல்விக் கட்டணம் வசூலிக்கும் காலக்கெடு நீட்டிப்பு இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

கல்விக் கட்டணத்தில் 40 சதவீதம் செலுத்தும் முதல் தவணைக் காலத்தை, வரும் 30ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
x
ஆன்லைன் வகுப்பு எடுத்த பள்ளிகள், கல்விக் கட்டணம் வசூலித்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே, முதல் தவணையாக 40 சதவிகித கட்டணம் செலுத்த வரும் 30ஆம் தேதிவரை விதித்த காலக்கெடுவை நீட்டிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 40 சத கட்டணம் என்பதை மீறி, முழு கட்டணத்தையும் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அந்தப் பள்ளிகள் அடுத்த மாதம்14ஆம் தேதி பதிலளிக்கவும் உத்தரவிட்டது. சிபிஎஸ்இ பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புதிய இணைய முகவரியை உருவாக்கி விளம்பரப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது. நூற்று பதினோரு புகார்களில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்