தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசன திட்டம் :முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்,.
தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசன திட்டம் :முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி கோரிக்கை
x
தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்,.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகேனக்கல் குடிநீர் திட்ட பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரிநீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து ஆயிரத்து 230 நீர் நிலைகளிலும் நிரப்பும் காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செழித்து, வேலைவாய்ப்புகளும், பிற வாழ்வாதார வாய்ப்புகளும் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்,. காவிரி உபரி நீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றித்தர வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்