"அதிமுக அரசு கொல்லும் அரசாக மாறி விட்டது" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காக்க வேண்டிய அதிமுக அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக அரசு கொல்லும் அரசாக மாறி விட்டது - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காக்க வேண்டிய அதிமுக அரசு, கொல்லும் அரசாக மாறிவிட்டதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவமனை ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்ட கவுரவன், யசோதா ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்ததை அவர் தமது டிவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஐசியூ வார்டில் திடீரென மின் தடை ஏற்பட்டு அதனால் ஆக்சிஜன் தடைபட்டதே மரணத்துக்குக் காரணம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது என்றும், கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்