சுவர் விளம்பரம் - திமுக, பாஜக மோதல் - திமுக வட்டச் செயலருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

சென்னை நங்கநல்லூரில் சுவர் விளம்பரம் தொடர்பாக நடந்த தகராறில் கைதான திமுக நிர்வாகிக்கு ஆலந்தூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சுவர் விளம்பரம் - திமுக, பாஜக மோதல் - திமுக வட்டச் செயலருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
x
சென்னை நங்கநல்லூரில் சுவர் விளம்பரம் தொடர்பாக நடந்த தகராறில் கைதான திமுக நிர்வாகிக்கு ஆலந்தூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. நங்கநல்லூரில் உள்ள தனியார் சுவற்றில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க.வினர் விளம்பரம் செய்திருந்தனர். பிறந்த நாள் விழா முடிந்ததும் அந்த சுவர் விளம்பரத்தை அழித்த திமுகவினர், அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை விளம்பரம் எழுதினர். இதை பாஜக தரப்பு அழித்தது. அப்போது நடந்த தகராறில் பாஜகவினரை தி.மு.க. நிர்வாகி நடராஜன் தாக்கியதாக கூறப்பட்டது. அவரை கைது செய்ய கோரி  பாஜக-வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, தி.மு.க. நிர்வாகி நடராஜனை  போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.


Next Story

மேலும் செய்திகள்