அரசு உத்தரவை மதிக்காத தனியார் பள்ளிகள் - முழுவீச்சில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள்

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு உத்தரவை மதிக்காத தனியார் பள்ளிகள் - முழுவீச்சில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள்
x
மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், இம்மாதம் 21ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்க கூடாது என பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால்,  அரசு உத்தரவை மீறி சென்னை உள்ளிட்ட நகரங்களில்  சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியிலும், நேரடியாகவும்  மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகள் விதிமுறை மீறி செயல்பட கூடிய பள்ளிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது,. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீதம் கட்டணம் கேட்ட பள்ளிகளின் பட்டியலை கல்வித்துறை ஏற்கனவே பெற்ற போதும்,  அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது,  இதுபோன்ற விதிமீறல்களுக்கு வித்திட்டிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்