துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

ஊரக துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி வழங்க கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
x
வழக்கறிஞர் பன்னீர்செல்வம் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 2014ல் கொண்டுவரப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு குறித்து மத்திய -மாநில அரசுகள் அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்