தீப்பெட்டி தர மறுத்த பெண் மீது துப்பாக்கிச் சூடு - தலைமறைவான 17 வயது சிறுவனை தேடும் போலீசார்

கிருஷ்ணகிரி அருகே புகைபிடிக்க தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதாக வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
தீப்பெட்டி தர மறுத்த பெண் மீது துப்பாக்கிச் சூடு - தலைமறைவான 17 வயது சிறுவனை தேடும் போலீசார்
x
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பன்னந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள். அவர் தனது வீட்டின் வெளியில் அமர்ந்து பாத்திரங்கள் சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த 17 வயது சிறுவன் மது போதையில் புகை பிடிக்க தீ பெட்டி கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பச்சையம்மாள் இல்லை என கூறவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அங்கிருந்து சென்ற சிறுவன் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து பச்சையம்மாளை நோக்கி சுட்டதில் கழுத்து, கை, கால்களில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்