"அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை செய்ய வேண்டும்" - வழக்கறிஞர் சூர்யமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனு

அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை செய்ய வேண்டும் - வழக்கறிஞர் சூர்யமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனு
x
திண்டுக்கல் மாவட்டம் அவிலிப்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்துள்ளார். கட்சியின் சட்ட திட்டத்தின்படி,  அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியை மாற்றவோ திருத்தவோ முடியாது என தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச்செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடத்தப்படவில்லை எனவும்  தேர்தல் நடத்தாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என  பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  ஆகியோர் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் கேட்டு கொண்டுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்