பேரூராட்சி அ.தி.மு.க முன்னாள் துணைத் தலைவர் வெட்டிக்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே பேரூராட்சி அதிமுக முன்னாள் துணைத் தலைவர் ராமச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
மதுராந்தகம் அருகே பேரூராட்சி அதிமுக முன்னாள் துணைத் தலைவர் ராமச்சந்திரன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  பிரேதத்தை வாங்க மறுத்த உறவினர்கள், சாலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சுமார் 500க்கும் மேற்பட்டோர் கடப்பாக்கம் என்ற இடத்தில் இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்ட நடைபெற்றது. முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்திய அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை ஏற்று சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்