வேளாண் மசோதாவை கண்டித்து காங்கிரசார் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவை கண்டித்து, புதுச்சேரி இளைஞர் காங்கிரசை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் தலைமை தபால் நிலையம் அருகே நாற்று நாடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் மசோதாவை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
x
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவை கண்டித்து, புதுச்சேரி இளைஞர் காங்கிரசை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் தலைமை தபால் நிலையம் அருகே நாற்று நாடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இந்த மசோதா விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தகூடியது எனவும் உடனடியாக மத்திய அரசு இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும்  கண்ட கோஷங்களை எழுப்பினர்.

விவசாய மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு - விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக பெங்களூரு மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மறுசீரமைப்பு மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வேளாண் மசோதாவை ரத்து செய்ய கோரிக்கை - திருவோடு ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வேளாண் மசோதாவை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழங்கங்களை எழுப்பினர்,. தொடர்ந்து வேளாண் மசோதாவை திரும்பப்பெறக்கோரி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வலியுறுத்தல் - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறக்க வலியுறுத்தி , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு நெல்லைக் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மழை காரணமாக நெல்லை காய வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு 17 சதவீத ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

விவசாயிகளுக்கு பதிலாக பல திட்டங்களில் போலி  பயனாளிகள் - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டத்தில் விசாயிகளுக்கு எதிரான மசோதா, கிசான் ஊழல் உள்ளிட்டவைகளை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குமராட்சியில் இயங்கிவரும் வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கிசான் திட்டத்தில் ஊழல் செய்தவர்களுக்கு பதிலாக உண்மையான பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்தும் பணம் பறிமுதல் செய்யப் படுவதாக குற்றம்சாட்டி கோஷமிட்டனர்.மேலும், ஆத்மா திட்டத்தின் கீழ் ஆளும்கட்சி பிரமுகர்களையும் விவசாயிகள் அல்லாதவர்களையும் பயனாளி பட்டியலில் சேர்த்த குமராட்சி வட்டார வேளாண் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

"பட்டா மாறுதல் இல்லாததால் கிசான் திட்டத்தில் பயன் பெற முடியவில்லை "

பட்டா மாறுதல் முகாம் உடனடியாக நடத்தக்கோரி காதில் பூவை வைத்துக்கொண்டு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பட்டா மாறுதல் இல்லாததால் கிசான் திட்டத்தில் பயன் பெற முடியவில்லை என்று குற்றம் சாட்டினர்,. மத்திய அரசை போலவே மாநில அரசும் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



Next Story

மேலும் செய்திகள்