நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை - அமைச்சர் எஸ் பி வேலுமணி தொடங்கி வைத்தார்

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக 20 சிறப்பு வாகனங்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை - அமைச்சர்  எஸ் பி வேலுமணி தொடங்கி வைத்தார்
x
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில்   நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக 20 சிறப்பு வாகனங்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் உத்தரவின் படி, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும், கோவை மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்