டாஸ்மாக் கடையில் துளையிட்டு மர்மநபர்கள் கொள்ளை - தடுக்க முயன்ற காவலாளியை கிணற்றில் தள்ளிக் கொலை

டாஸ்மாக் கடையில், திருட்டு முயற்சியை தடுக்க முயன்ற காவலாளியை, கிணற்றி தள்ளி மர்மநபர்கள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாஸ்மாக் கடையில் துளையிட்டு மர்மநபர்கள் கொள்ளை - தடுக்க முயன்ற காவலாளியை கிணற்றில் தள்ளிக் கொலை
x
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செம்மினிபட்டி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடையின் சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை, அங்கிருந்த காவலாளி கணேசன் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது காவலாளியை தாக்கிய மர்மநபர்கள், அவரின் கை, கால்களை கட்டி, அருகே உள்ள விவசாயக் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர். மேலும் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மது பாட்டில்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக, கை ரேகை நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட காவலாளியின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவலாளியை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு மதுபானங்களை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்