தமிழகத்தில் ரூ.4,167 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு - மத்திய இணையமைச்சர் அனுராக் தகவல்

ஜூலை 2017 முதல் 2020 ஆகஸ்ட் வரை, தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 167 கோடி ரூபாய் அளவுக்கு ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ரூ.4,167 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு - மத்திய இணையமைச்சர் அனுராக் தகவல்
x
ஜூலை 2017 முதல் 2020 ஆகஸ்ட் வரை, தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 167 கோடி ரூபாய் அளவுக்கு ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.  இது தொடர்பாக ஆயிரத்து 273 புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  இந்திய அளவில் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு மொத்தமாக  93 ஆயிரத்து 462 கோடியாக உள்ள நிலையில், இதில்  தமிழகத்தின் பங்கு 4 புள்ளி நான்கு ஆறு சதவீதமாக உள்ளது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின், வரி ஏய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், இந்த வரி ஏய்ப்புகளுக்கு உடந்தையாக எந்த மத்திய வரி அதிகாரியும் செயல்படவில்லை என்றும் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்