"வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம்"

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 28-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, திமுக தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  கூட்டத்தில் திமுகவின் கூட்டணிக்கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன்,ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள், வேளாண் சட்டத்திற்கு எதிராக வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெரும் என தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்