தனியார் கோழி பண்ணையிலிருந்து வரும் ஈக்கள் - சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகியுள்ள கிராம மக்கள்

ஈக்களுக்கு பயந்து ஊரையே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஒரு கிராமம்
தனியார் கோழி பண்ணையிலிருந்து வரும் ஈக்கள் - சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகியுள்ள கிராம மக்கள்
x
சாதாரண ஈக்கள் தான், ஆனால் ஒரு கிராமத்தின் நிம்மதியையே தொலைத்து வருகின்றன. 

வெட்டுக்கிளி படையெடுப்பைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம், ஆனால் கூட்டமாக படையெடுத்து வரும் ஈக்களால் என்ன செய்வதென தெரியாமல் தவித்து வருகின்றனர் செங்கம் அருகே உள்ள வெள்ளாம்பட்டி கிராம மக்கள். 


ஈக்கள் தொல்லைக்கு காரணமாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுவது அங்குள்ள தனியார் கோழிப்பண்ணையைதான். அங்கிருந்து முறையாக கழிவுகளை அப்புறப்படுத்தாததால், அங்கு உற்பத்தியாகும் ஈக்கள் கிராமங்களுக்குள் படையெடுத்து பாடாய்ப்படுத்துகின்றன. 

மனிதர்கள், ஆடு, மாடுகள் மீது மொய்க்கும் ஆயிரக்கணக்கான ஈக்கள், வீடுகளுக்குள் புகுந்து சமைத்து வைத்த உணவு உள்ளிட்டவற்றில் உட்கார்ந்து பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி  வருவதால் கொரோனா காலத்தில் வேறு நோய்களும் பரவி விடுமோ என்ற அச்சத்துடன் வாழ்கின்றனர் சுற்றுவட்டார கிராம மக்கள்.. Next Story

மேலும் செய்திகள்